எமது கல்லூரியானது 153 வருடங்களை கடந்து பல்வேறு சாதனை பயணங்களுடன் கல்லூரி செயற்பாடுகளை செய்து வருகின்றோம். கல்லூரியின் வளர்ச்சியில் சமூக தொடர்பு என்பது இன்றியமையாததாகும். குறிப்பாக அதிபர் ஆசிரியர்களுடன் பெற்றோர் தொடர்பாடல் என்பது மிக முக்கியமாகும். பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் தொடர்பாடல் அதிகரித்து வருவதை அண்மைக்கால நிகழ்வுகளினூடாக அவதானிக்க முடிகின்றது.
இதற்காக பாடசாலை அதிபர் ஆசிரியர்களை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணி முதல் 1.30 மணிவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக அதிபரை பாடசாலை நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை சந்திக்க முடியும்.
எமது கல்லூரியின் சில பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன் வேலைப்பழு மற்றும் ஏனைய விடயங்கள் நிமித்தம் நேரடியாக வருகை தந்து சந்திக்க முடியாதவர்களுக்காக "Tell to Principal" என்னும் Application ஒன்றினை உருவாக்கியுள்ளோம். எனவே கல்லூரி சார்பாக உங்களிடம் உள்ள முறைப்பாடுகள், யோசனைகள் மற்றும் கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம். முடியுமான சந்தர்ப்பங்களில் உடனடியாகவே பதில் வழங்கப்படும்.
நீங்கள் விரும்பிய மொழியில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தெரிவிக்க முடியும் என்பதுடன் ஏதாவது ஆவணங்கள்/கடிதம் இணைக்க விரும்பின் அதற்கான வசதிகளும் உள்ளன. மேலும் உங்களுடைய கருத்துக்களின் இரகசிய தன்மை பேணப்படுவதுடன் அதிபரினால் மட்டுமே இவற்றினை பார்வையிட முடியும். எனவே எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு உங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் பெரிதும் எதிர்பார்த்து நிற்கின்றேன்.